இணையத்தில் அதிகமாக உலவுபவர்களுக்கு மிகவும் பயனுள்ள ஃபயர்பாக்ஸ் நீட்சி இது. (Firefox Browser add-on). www.aroospc.blogspot.com
எனக்கு மிகவும் பிடித்த பயன்பாடு - முடிவில்லா பக்கம் ("Endless Page"). நீங்கள் ஒரு வலைப்பூவைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், முதல் பக்கம் படித்து முடிக்கும் முன், தானாகவே அடுத்த பக்கத்தைத் தரவிறக்கி வைத்திருக்கும். அதே போல், Google, yahoo போன்ற தேடுப்பொறிகளில் தேடிடும் பொழுதும், தானாகவே அடுத்தடுத்த பக்கங்களைத் தரவிறக்கம் செய்து தயாராக வைத்திருக்கும்
இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்திட, https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825
“Related Article” - சில நேரங்களில், நாம் இணைய பக்கங்களில் புதிய தகவல்களைப் படித்திடும் போது, அதைப் பற்றி மேலும் அறிய, சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள விளைவோம். அதை எளிதாக்குகிறது, இந்த நீட்சி. ஒரு வார்த்தையைத் தெரிவு (select) செய்த உடன், அதன் மேல், ஒரு பலூன் (Popup Ballon) தோன்றும், அதில் “Google Search", "Wikipedia Search", "Twitter Search" போன்ற அம்சங்கள் இருக்கும்.
மேலும், வார்த்தைகளைத் தெரிவு செய்தவுடன், தானாகவே “Copy" ஆகிவிடும். (காப்பி & பேஸ்ட் பதிவர்களுக்கு உதவும் என்று நினைக்கிறேன்.)
மேலும், Googleலில் தேடிடும் பொழுதும், தேடும் சொல்லிற்குச் சம்பந்தப்பட்ட நிறைய பக்கங்களை ”Amazon, Twitter" போன்ற இணைய தளங்களில் இருந்து, எடுத்துத் தருகிறது.
“Awesome Toolbar” - இந்த வசதி, Google Chrome-ல் இருப்பது போல, நாம் Address bar-ல் type செய்ய ஆரம்பித்தவுடன், நாம் அடிக்கடி செல்லும் தளங்களைப் பட்டியலிடும்.
Ctrl + Space - தட்டினால் Quick launcher என்ற வசதி வருகிறது.அதிகம் பயன்படுத்தும் தளங்களை அதில் பட்டியலிட்டுக் கொண்டால், Cellphone-ல் Quick dial வசதி இருப்பது போல, ஒரே சொடுக்கில் நமக்கு விருப்பமான தளத்திற்குச் செல்லலாம்.
நாம் பார்வையிடும் இணைய தள பக்கத்தில் உள்ள எல்லா சுட்டிகளையும், எல்லா படங்களையும் ஒரே சொடுக்கில் தரவிறக்கம் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
இந்த நீட்சியைத் தரவிறக்கம் செய்ய, இங்கே செல்லவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/9825
ஜிமெயில், "Undo Send" என்ற ஒரு புதிய வசதியை அளிக்கிறது. அதாவது, நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெயிலை, மெயில் பெறுபவர் இன்பாக்ஸிக்குச் செல்லாமலேயே தடுத்திடலாம்.
மெயில் "Compose" செய்து, மின்னஞ்சலை அனுப்பிய பிறகு, Mail Send Successfully என்ற செய்தி வரும். நீங்கள் இந்த வசதியை activate செய்திருந்தால், மின்னஞ்சல், அனுப்பிய பிறகு, "Your Message has been send, Undo" என்ற இணைப்பு வரும். மின்னஞ்சல் திரும்பப் பெறுவதாயின், இந்த இணைப்பைச் சொடுக்கினால் போதும்.
இந்த சேவையை பயன்படுத்த, ஜிமெயிலில் உள்நுழைந்து, "Labs" பக்கத்திற்குச் சென்று, "Undo Send" சேவையைத் தேர்ந்தெடுத்துச் செயல்படுத்தவும். (ஜிமெயில் பக்கத்தில், மேலே வலது மூலையில், பயனர் பெயர், "Setting" இடையில், பச்சை நிற குடுவை ஒன்று இருக்கும். அதுவே, "Labs" பக்கத்திற்குச் செல்லும் இணைப்பாகும்.)
மின்னஞ்சல், பெறுநர் இன்பாக்ஸிக்குச் சென்றுவிட்டால், அதை திரும்பப் பெற இயலாது.